பாஜகவுக்கு சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை: அமைச்சர் ஜெயகுமார்    

பாஜக ஆபத்தான கட்சியா என்று சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
பாஜகவுக்கு சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை: அமைச்சர் ஜெயகுமார்    

சென்னை: பாஜக ஆபத்தான கட்சியா என்று சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ் இல்லத்தில் செவ்வாயன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் திங்களன்று விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய விஷயங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார்.

அது பற்றி அவர் கூறியதாவது, 7 பேர் விவகாரம் பற்றி எனக்குத் தெரியவில்லை என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு விட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் என்று கேட்டிருக்க வேண்டும் என்று பதிலளித்தார். கேள்வியை சரியாக கேட்கவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல. மனிதாபிமான அடிப்படையில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. பேரறிவாளன் பரோலில் வந்த போது கூட அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தேன். 

எனக்குத் தெரியும் என்றால் தெரியும் என்று சொல்வேன், தெரியாது என்றால் தெரியாது என்று சொல்வேன். 

மேலும், பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள், அதனால் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஆபத்தான கட்சிதான் என்று பதிலளித்தார். இதனை விளக்குமாறு செய்தியாளர்கள் கேட்ட போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.    

இந்நிலையில் பாஜக ஆபத்தான கட்சியா என்று சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், ரஜினிகாந்த் இவ்வாறு பதிலளித்தது குறித்து தெரிவித்து,  பாஜக குறித்து அவரின் கருத்து கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலலளித்த அவர், 'பாஜக ஆபத்தான கட்சியா என்று சான்றிதழ் கொடுக்க நான் ஒன்றும் சென்சார் போர்டு அதிகாரி இல்லை; அவர்கள் மத்தியில் ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு நல்லது செய்கிறார்களா என்று மட்டும்தான் பார்க்க வேண்டும' என்று பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com