திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வரும் போராட்டக் குழுவினர்.
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வரும் போராட்டக் குழுவினர்.

ஒப்பந்த மின் ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி மறியல் போராட்டம்: 151 பேர் கைது 

தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில்

தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 151 பேர் கைது செய்யப்பட்டனர். 
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்; 45 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கல்வித்தகுதி அடிப்படையில் காலி பணியிடத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும்; தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. 
முன்னதாக போராட்டக் குழுவினர் நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக துர்காலயா சாலையில் உள்ள மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், துணைத் தலைவர் ஜி.பழனிவேல், மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 151 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com