நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷுக்கு பிரிவு உபசார விழா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம்
நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷுக்கு பிரிவு உபசார விழா


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பிரிவுபசார விழா நடைபெற்றது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் , அரசு தலைமை வழக்குரைஞர், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இந்த விழாவில், பேசிய அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், அலாகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றார். கடந்த 2 ஆண்டுகள் 7 மாதம் வரை நீதிபதியாக பதவி வகித்து வந்த அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும், அவர் நீதிபதியாக பதவி வகித்த கர்நாடகம், அலாகாபாத் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் 62,000 வழக்குகளை விசாரித்து முடித்து வைத்துள்ளதாக விஜய் நாராயண் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் 7 மாதங்கள் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளேன். இந்த நீதிமன்றத்தில் உள்ளவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பே, சிறப்பாகப் பணியாற்ற உதவியது. இந்த நீதிமன்றத்தை விட்டுச் செல்வது வேதனையளித்தாலும், பசுமையான நினைவுகளுடன் செல்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com