நெருங்குகிறது கஜா புயல்: எந்தெந்த மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 7 மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்குகிறது கஜா புயல்: எந்தெந்த மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 7 மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கஜா புயல் கரையை கடக்கும் போது கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்றும் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மூலமாக கடல் பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று மாலை 5 மணி முதல் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் புயல் நகரும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com