பி.கே.சேகர்பாபு தந்தை பி.கிருஷ்ணசாமி காலமானார்

சென்னை துறைமுகம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபுவின் தந்தை பி.கிருஷ்ணசாமி (88)
பி.கே.சேகர்பாபு தந்தை பி.கிருஷ்ணசாமி காலமானார்


சென்னை துறைமுகம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபுவின் தந்தை பி.கிருஷ்ணசாமி (88) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சென்னை ஓட்டேரி நாராயண மேஸ்திரி முதல் தெருவில் வசித்து வந்த இவருக்கு மனைவி கோவிந்தம்மாள், சேகர்பாபு உள்ளிட்ட இரு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். மறைந்த கிருஷ்ணசாமியின் இறுதிச் சடங்குகள் ஓட்டேரி மயானத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு செல்லிடப்பேசி எண்: 98410 40026.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி: ஓட்டேரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பி.கிருஷ்ணசாமியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட நிர்வாகிகள் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com