பெண் குழந்தைக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும் சிறப்பாகச் செயல்படும் பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 -ஆம் தேதி இந்த விருது அளிக்கப்படும்.
2019 -ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் போன்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் பெற்று மாவட்ட சமூக நல அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் அவை சமூக நல ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுக் குழு மூலமாக பரிசீலனை செய்யப்பட்டு அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை விருதுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com