தயாராக இருந்தும் பயன்பாட்டுக்கு வராத நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர்..!

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் நவீன முறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம்
திருவள்ளூர் அரசு  மருத்துவமனையில்  திறப்பு  விழாவிற்குக்  காத்திருக்கும்  எம்.ஆர்.ஐ . ஸ்கேன்  மையம்.
திருவள்ளூர் அரசு  மருத்துவமனையில்  திறப்பு  விழாவிற்குக்  காத்திருக்கும்  எம்.ஆர்.ஐ . ஸ்கேன்  மையம்.


திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் நவீன முறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று தயார்நிலையில் உள்ளது. இந்த மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
தற்போதைய நிலையில் எவ்விதமான நோயாக இருந்தாலும், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே கருவி மூலம் நோயாளிகள் உடலில் எடுக்கப்படும் புகைப்படங்களை பார்த்தே மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி மாநில அளவில் 18 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், பல அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. எடுக்கும் வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்கள் தனியார் ஸ்கேன் மையங்களில் அதிக பணம் கொடுத்து எடுக்க வேண்டியுள்ளது. 
இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புதிதாக கடலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய 12 மாவட்ட தலைமை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ. 6 கோடி மதிப்பில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. 
ரூ.6 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி : இதேபோல், திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி இல்லாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 800-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், இப்பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியே இருந்து வருகின்றனர். 
ஆனால், இங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம் இல்லாத நிலை இருந்தது. இதனால், திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கும் ரூ.6 கோடியில் நவீன 
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், எந்த நேரமும் உயர் மின் அழுத்தத்துடன் கூடிய மின்மாற்றியுடன் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணி கடந்த 5 மாதங்களாக மும்முரமாக நடந்து முடிந்துள்ளது. 
குறைந்த செலவில்....: இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்பது நோய்களை தெளிவாகக் கணிக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகும். இது ம்ஹஞ்ய்ங்ற்ண்ஸ்ரீ ழ்ங்ள்ர்ய்ஹய்ஸ்ரீங் ண்ம்ஹஞ்ண்ய்ஞ் (ஙதஐ) எனப்படும். இதில் சி.டி. ஸ்கேன் படங்களை விட, எம்.ஆர்.ஐ. மூலம் எடுக்கும் படங்கள் தெளிவாக இருக்கும். இதன் மூலம் எலும்பு, மூட்டு, தசை, தசைநார்கள், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக படம்பிடித்துக் காட்டும் தன்மையுடையது. 
இந்த வசதி திருவள்ளூர் மருத்துவமனையில் இல்லாததால், நோயாளிகள் சென்னைக்குச் சென்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 
ஆயிரம் வரையில் கூடுதலாக பணம் செலவு செய்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வரவேண்டிய நிலையிருந்தது. ஆனால், ஏழை எளிய மக்களால் அதிக செலவு செய்து ஸ்கேன் எடுக்க முடியாத நிலையும் இருந்து வந்தது. தற்போதைய நிலையில் ஸ்கேன் மையம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று திறப்புக்கு தயாராக உள்ளது. இனிமேல் நோயாளிகள் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்துக் கொள்ள முடியும். இதனால், உடனுக்குடன் தெள்ளத்தெளிவான சிகிச்சையும் நோயாளிகளுக்கு கிடைக்கும். அதனால் பொதுமக்களின் உபயோகத்திற்கு விரைவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியைத் தொடங்கி வைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். 
திறப்புக்காக காத்திருப்பு....: இது குறித்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், அதற்கான தனி மின்மாற்றி வசதியுடன் அமைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. இதை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்க இருப்பதாக அரசிடம் இருந்து தகவல் வந்தது. இதுவரையில் நாள் எதுவும் குறிப்பிடவில்லை. இனிமேல் நோயாளிகள் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம். இதை எடுக்க ரூ.2,500 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு இலவசமாகவே எடுக்கப்படுகிறது. இதுவே தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஸ்கேன் மையங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com