கஜா புயல் சீற்றம்: நாகை, வேதாரண்யத்தில் மிக பலத்த காற்றுடன் மழை: நாகை, சீர்காழியில் 38.6 மி.மீ. மழை

கஜா புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நாகை மாவட்டம், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் மிக பலத்த சூறை காற்று வீசியது. 
கஜா புயல் சீற்றம்: நாகை, வேதாரண்யத்தில் மிக பலத்த காற்றுடன் மழை: நாகை, சீர்காழியில் 38.6 மி.மீ. மழை

கஜா புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நாகை மாவட்டம், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் மிக பலத்த சூறை காற்று வீசியது. 

கஜா புயல் நாகையை நெருங்கத் தொடங்கிய வியாழக்கிழமை மாலை முதல் நாகை மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மற்றும் லேசான மழை பெய்யத் தொடங்கியது. மாலை 6 மணிக்குப் பின்னர், நாகப்பட்டினம், ஆயக்காரன்புலம் ஆகிய பகுதிகளில் பலத்தக் காற்றுடன் மழை பெய்தது. 

இரவு சுமார். 10.50 மணியிலிருந்து நாகை, ஆயக்காரன்புலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சூறை காற்று வீசத் தொடங்கியது. இரவு சுமார் 11.30 மணி அளவில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் மிக பலத்தக் காற்று வீசத் தொடங்கியது.  

இந்தக் காற்றின் சீற்றம் காரணமாக, ஆங்காங்கே பனை மற்றும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளில் வேயப்பட்டிருந்த இரும்புத் தகடுகள், கீற்றுகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் காற்றின் வேகத்தில் சாலைகளில் வீசப்பட்டன. வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணிக்கு மேலாகவும் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.  மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.  

வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவு 12 மணி வரையிலான நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிகளவாக நாகை மற்றும் சீர்காழியில் 38.6 மி.மீ மழை பதிவானது.  மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : மயிலாடுதுறை - 37. திருப்பூண்டி - 30.4. வேதாரண்யம்- 27. தலைஞாயிறு - 26.8. கொள்ளிடம் - 24.6. மணல்மேடு - 19.8. தரங்கம்பாடி - 7.3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com