தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்: அடுத்தகட்ட நிலவரம் உடனுக்குடன்!

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. 
தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்: அடுத்தகட்ட நிலவரம் உடனுக்குடன்!


வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. 

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

தற்போது கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் திண்டுக்கல் பகுதிக்கு அருகே நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த மழையும் பெய்து வருகிறது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த தகவல்கள் இங்கே உடனுக்குடன்... 
இணைந்திருங்கள்.

பகல் 15.19: வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்புக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; மொத்த உயிரிழப்பு 26 ஆனது.

பகல் 14.59: தமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குச் சென்றது கஜா புயல். இன்று மாலை அரபிக் கடல் நோக்கி செல்லும்

பகல் 14.50: கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

பகல் 14.11: தமிழகத்தில் 'கஜா' புயல் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. நாகபட்டிணத்தில் இருவர் மற்றும் கொடைக்கானலில் பெண் ஒருவர் உயிரிழந்த காரணத்தால் தற்போது எண்ணிக்கை 20-இல் இருந்து 23-ஆக உயர்ந்துள்ளது.  

பகல் 13.10: கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பகல் 12.53: அவசர உதவிக்கு

கஜா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது: பாலச்சந்திரன் 

சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, நாகப்பட்டினத்தில் கரையைக் கடந்த கஜா புயல் இன்று காலை 11.30 மணியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். இது கேரளாவை அடைந்து பிறகு அரபிக் கடலில் சென்றடையும்.

சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் மற்றும் கன மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

•••

விழுப்புரம் மாவட்டத்தில் பூமியார்ப்பாளையம் பகுதியில் 3 வீடுகளும் 10க்கும் மேற்பட்ட மரங்களும் கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். 4 வீடுகள் சேதமடைந்தன. இங்கு 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

****
பலத்த மழை: புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழை, கன மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக நாகை மாவட்டத்தின் பல இடங்களில் பனை, தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயல் கரையைக் கடக்கும்போது இடி, மின்னல் தொடர்ந்தது.

நாகையில்... நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் 102 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 75 பேரும், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 180 பேரும் நாகை மாவட்டப் பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

புயல் தீவிரம் 6 மணி நேரத்தக்கும் மேல் நீடித்தது... புயல் கரையைக் கடந்தாலும், அதன் தீவிரம் 6 மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com