கஜா புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கஜா புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கஜா புயலால் ஏற்பட்ட கனமழையில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதுவரை 7 பேர் மற்றும் திருவாரூரில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை சற்று மழை ஓய்ந்த நிலையில், தற்போது சனிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மீட்புப்பணிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதேபோன்று நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியதால் மீட்பு பணிகள் பாதிப்படைந்தன.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளில் இன்று மருத்துவம் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலை. மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் தெரிவித்தார்.

அதுபோன்று சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் தேனி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 

தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அண்ணா பல்கலை. வளாக 4 கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com