கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து

நிர்வாகக் காரணங்களால் கோவை - சேலம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  
கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து

நிர்வாகக் காரணங்களால் கோவை - சேலம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  கோவை - சேலம் இடையே பயணிகள் ரயில்கள் எண் 66602, 66603 ஆகியவை தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8 ஆகிய 4 சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.  

அதேபோல், பாலக்காடு கோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பணிகள் காரணமாக கோவை - திருச்சூர் பயணிகள் ரயில் (எண் 56650) சேவை நவம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் பகுதியளவு, அதாவது ஷோரனூர் - திருச்சூர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com