நிவாரணப் பணிகளில் தாமதமா? தகவல் அளியுங்கள்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
நிவாரணப் பணிகளில் தாமதமா? தகவல் அளியுங்கள்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்


சென்னை: நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

கஜா புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

நிவாரணப் பணிகளில் இரவும் பகலாக அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளியுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com