இதுபோன்ற முதல்வரைப் பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? ராமதாஸ் சாடல்

கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையை  பாமக நிறுவனர் ராமதாஸ்
இதுபோன்ற முதல்வரைப் பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? ராமதாஸ் சாடல்


'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையை  பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படுவதில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 40 ஆண்டுகளாக இழப்பீடு தரப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு தேவையா? சென்னை உயர்நீதிமன்றம் வினா-சாட்டையடி கேள்வி. உணர்வுள்ளவர்களுக்கு வலிக்கும் திருந்துவர். ஆனால்,நமது ஆட்சியாளர்கள்?

நிவாரணப் பணிகளுக்கு கேரளத்தைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டு முதல்வர் பழனிசாமி, கேரளத்தில் பினராயி விஜயன் அரசு வெள்ள நிவாரணப் பணிகளை செய்தது போல தமிழகத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளை எடப்பாடி அரசு செய்ததா?

கேரள முதல்வர் 100 மணி நேரம் கழித்து தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றாரா? கேரள முதல்வரைப் போன்று நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் எடப்பாடி பேசினாரா? ஆலோசனைகளைப் பெற்றாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை 100 மணி நேரம் கழித்து முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார். மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம் வருகிறார். 

பாதிக்கப்பட்ட மக்கள் மீது என்னவொரு அக்கறை? இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? என சாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com