பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு: இன்றைய விலை விபரம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 34 நாள்களாக சரிந்து வருதையடுத்து பெட்ரோல், டீசல் விலையும் கடந்த 34
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு: இன்றைய விலை விபரம்


சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 34 நாள்களாக சரிந்து வருதையடுத்து பெட்ரோல், டீசல் விலையும் கடந்த 34 நாள்களாக குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இன்றைய (நவ.20) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.46 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.44 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அக்டோபர் 17-ஆம் தேதி டீசல் விலை உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்ததால் மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த மாதம் 4-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததுடன், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.1 குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆக மொத்தம், இரண்டின் விலையிலும் ரூ.2.50 வரை குறைக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களும் மாநில அரசு விதிக்கும் வரியை ரூ.2.50 குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை பல மாநிலங்களில் ரூ.5 வரை குறைந்தது.

இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, அக்டோபர் 17-ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. 

அதற்கு அடுத்த நாளில் இருந்து அவற்றின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது மக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து முறையே பெட்ரோல் விலை 15 காசுகளும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை வந்துள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. 

அக்டோபர் மாதத்தில் விலை உச்சத்தில் இருந்ததை ஒப்பிடும்போது இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 7 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 5 ரூபாயும் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com