மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை கட்டணமின்றி பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை நுழைவுக் கட்டணமின்றிப் பார்வையிட்டனர்.  
மாமல்லபுரம் கடற்கரைக்  கோயிலை சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள். 
மாமல்லபுரம் கடற்கரைக்  கோயிலை சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள். 

மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை நுழைவுக் கட்டணமின்றிப் பார்வையிட்டனர்.  

ஆண்டுதோறும் மத்திய தொல்லியல்துறை சார்பில் நவம்பர் 19ஆம்  தேதி முதல் 25ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   இதையொட்டி, சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் மற்றும் குடைவரைச் சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதையடுத்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து புராதனச் சின்னங்களை கட்டணமின்றிப் பார்வையிட்டனர்.

இதனிடையே, உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, தொல்லியல் ஆய்வுத் துறையின் சென்னை வட்டம் மற்றும் தமிழக அரசின் பண்பாட்டுத் துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டுத் தூதர் கரின் ஸ்டோல் இதில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். "காஞ்சிபுரம் மாவட்ட நினைவுச் சின்னங்கள்' என்ற தலைப்பில் ஒரு வார புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் கெüரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு உலக பாரம்பரிய வாரம் மற்றும் அழியாப் புகழ் பெற்ற சுற்றுலா கலைச் சின்னங்கள் குறித்துப் பேசினர். புகைப்படப் கண்காட்சி 19ஆம் தேதி முதல் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்துடன் இணைந்து நாள்தோறும் மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com