மீலாது நபி: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மீலாது நபி திருநாளை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
மீலாது நபி: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து


மீலாது நபி திருநாளை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இறைத் தூதரான முகமதுநபியின் பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் மீலாது நபி கொண்டாடப்படுகிறது. மிகஉயர்ந்த மனிதப் பண்புகளான ஒழுக்கம், கனிவு, இரக்கம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்தவர் இறைத்தூதர் முகமது.
இந்த மகிழ்ச்சியான நன்னாளில் நமது இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறைத்தூதர் முகமதுவின் உயர்ந்த கொள்கைகளை நாம் நமது வாழ்வில் பின்பற்றி, அதன்மூலமாக அன்பு மற்றும் சகிப்புத்தன்மையை இந்த சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உட்புகச் செய்வோம்.
முதல்வர் பழனிசாமி: மீலாது நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். பிறருக்கு உதவி செய்பவன், சினத்தை அடக்குபவன், பிறரை மன்னிப்பவனுக்கு இறைவன் எப்போதும் இரங்குவான் போன்ற நபிகளின் அருட்போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும் அமைதியும் தழைத்தோங்கும். நபிகள் நாயகம் பிறந்த இந்தப் புனித நாளில், உலகில் அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளில் மக்கள் அனைவரும், மத நல்லிணக்கத்தோடும் சாந்தி, சமாதானம், பொறுமை, அன்பு, மன்னிப்பு, கொடை ஆகிய நற்பண்புகளோடும், வாழ்வில் வளமும், நலமும், உயர்வும், மகிழ்வும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
ராமதாஸ் (பாமக): அண்ணல் நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைப்பிடிப்பவர்கள் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் அன்புள்ளத்துடன் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர். இந்தச் சகோதரத்துவம் உலகுள்ள வரை தொடர வேண்டும்.
அன்புமணி (பாமக): எல்லோரிடமும் கருணை காட்டுங்கள் என்று போதித்த இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாதுன் நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்.
வைகோ (மதிமுக): உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நாளில் மதிமுக சார்பில் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com