வைகை அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்திய மத்திய நீர்வளம் மற்றும் அணை பாதுகாப்புக் குழுவினர்.
வைகை அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்திய மத்திய நீர்வளம் மற்றும் அணை பாதுகாப்புக் குழுவினர்.

வைகை அணை பராமரிப்பு நன்றாக உள்ளது: மத்திய குழு

வைகை அணையின் பராமரிப்பு நன்றாக உள்ளது என அணையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மத்திய குழு தெரிவித்துள்ளது.


வைகை அணையின் பராமரிப்பு நன்றாக உள்ளது என அணையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மத்திய குழு தெரிவித்துள்ளது.
வைகை அணையின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் உலக வங்கி பல கோடி நிதி வழங்கி உள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகளும் நிதி வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அணையின் கரைப் பகுதியை பலப்படுத்துதல், தண்ணீர் வழிந்தோடும் வாய்க்கால், தார்ச் சாலைகள், ஷட்டர்களின் பழுது நீக்கம், பூங்கா மேம்பாட்டுக்கு என ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டநிதிக்கு தகுந்த பணிகள் நடந்துள்ளனவா? என்பதை ஆய்வு செய்யவும் அணை பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மாத்துôர், அணை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பிரமோத் நாராயணன் தலைமையில் 70 பேர் கொண்ட குமுவினர் செவ்வாய்க்கிழமை வைகை அணைக்கு வந்தனர். 
அவர்கள், அணையின் மேல் தளப் பகுதி, பெரிய மதகுகளின் செயல்பாடு, தண்ணீர் வெளியேறும் பகுதி, சுரங்கப்பாதை, நீர்க்கசிவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பகுதி, பிக் அப் அணை ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர். 
அப்போது 7 மதகுகள் வழியாக தனித்தனியாக தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் 7 மதகுகளையும் திறந்து விட வேண்டும் என்றும், ஒரே சமயத்தில் கூடுதல் தண்ணீரை திறக்காமல், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். 
இந்த ஆய்வுக்குப் பின்,ஆணையத் தலைவர் மாத்தூர் கூறியதாவது: உலக வங்கி மூலமாக பெறப்படும் நிதியிலிருந்து 7 மாநிலங்களில் உள்ள 200 அணைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து பல அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். 
அதில் ஒரு பகுதியாக வைகை அணையில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்துள்ளோம். வைகை அணையின் பராமரிப்பு நன்றாக உள்ளது என அவர் தெரிவித்தார். 
ஆய்வில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐடிஐ தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுப் பணி ஏற்பாடுகளை கண்காணிப்பு பொறியாளர் நடராசன், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com