சுற்றுப்புறத் தூய்மை தனி நபரின் கடமை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சுற்றுப்புறத் தூய்மை என்பது தனி நபரின் கடமையாகும். தனிநபர் ஒவ்வொருவரின் சுற்றுபுறத் தூய்மை, ஊரைத் தூய்மையாக்கும்.
திருவாரூர் தெற்குவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழி வாசிக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ராஜகோபால்,
திருவாரூர் தெற்குவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழி வாசிக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ராஜகோபால்,

சுற்றுப்புறத் தூய்மை என்பது தனி நபரின் கடமையாகும். தனிநபர் ஒவ்வொருவரின் சுற்றுபுறத் தூய்மை, ஊரைத் தூய்மையாக்கும். ஊர் தூய்மையானால் தமிழகம் தூய்மை நிலையை எட்டும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
திருவாரூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க புதன்கிழமை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருவாரூர் தெற்கு வீதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி அரங்கை பார்வையிட்ட பின் மேலும் அவர் பேசியது: 
ஒவ்வொருவரும் வீட்டை  சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் தங்களது தாய், தந்தைக்கு உதவியாக, வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமது இருப்பிடத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் ஊர் தூய்மையாக மாறும். ஊர் தூய்மையாக இருந்தால், தமிழகமே தூய்மை நிலையை அடையும் என்றார்.
பின்னர் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் எனும் உறுதிமொழியை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், இந்த உறுதிமொழியை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தமிழில் வாசிக்க, அதேபோல் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு ஆளுநர் உபகரணங்களை வழங்கினார். 
முன்னதாக திருவாரூருக்கு காலை 12.30 மணிக்கு வருகை தந்த ஆளுநர், பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 
இதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தெய்வநாயகி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடந்து சென்று ஆய்வு செய்த ஆளுநர்: திருவாரூர் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்ட ஆளுநர், அதன்பிறகு தூய்மை ரதத்தை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தெற்குவீதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தூய்மைப் பணிக்கு பிறகு திடீரென அங்கிருந்து நடந்து பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த கடைகளை பார்வையிட்டபடி சென்றார். தொடர்ந்து, ஓடம்போக்கி ஆற்றை கடந்து, அங்கிருந்த கடைகளை பார்வையிட்டு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றவர் அங்கிருந்து காரில் ஏறி தெற்கு வீதிக்குச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com