உதகை மலை ரயில் கட்டணம் உயர்வு

உதகை மலை ரயிலுக்கான புதிய ரயில் கட்டணங்கள் கடந்த திங்கள்கிழமை ( அக்டோபர் 8) முதல் அமலுக்கு வந்துள்ளன. 
உதகை மலை ரயில் கட்டணம் உயர்வு

உதகை மலை ரயிலுக்கான புதிய ரயில் கட்டணங்கள் கடந்த திங்கள்கிழமை ( அக்டோபர் 8) முதல் அமலுக்கு வந்துள்ளன. 
இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: 
நாட்டில் 5-க்கும் குறைவான ரயில்களில் மட்டுமே ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலான மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது நவீன இருக்கைகள், வை-ஃபை உள்ளிட்ட புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாலும், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களாலும், அனைத்து ரயில்களுக்கும் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
நீலகிரி மலை ரயிலால் ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய ரயில் சேவை என்பதால், நஷ்டம் ஏற்பட்டாலும் இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவதே பெருமையாகும். 
இந்நிலையில் நீலகிரி மலை ரயிலுக்கான புதிய கட்டணங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, மேட்டுப்பாளையம்- உதகை இடையே முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்புக் கட்டணம் ரூ. 195-இல் இருந்து ரூ. 470 ஆகவும், 2 ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 35-இல் இருந்து ரூ.145 ஆகவும், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான முதல் வகுப்புக் கட்டணம் ரூ.174-இல் இருந்து ரூ.365 ஆகவும், 2 ஆம் வகுப்புக் கட்டணம் ரூ. 25 இல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
மேலும், மேட்டுப்பாளையம்- உதகை இடையே முன்பதிவு செய்யாத பயணக் கட்டணம் ரூ.15-இல் இருந்து ரூ. 75 ஆகவும், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான பயணக் கட்டணம் ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
மேட்டுப்பாளையத்தில் இருந்து வெலிங்டனுக்கு ரூ. 50, அருவங்காட்டுக்கு ரூ. 55, கேத்தி ரூ. 60, லவ்டேல் ரூ. 65, உதகைக்கு ரூ. 75 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குழந்தைகளுக்கான பயணக் கட்டணம் குன்னூர் வரை ரூ. 50, வெலிங்டன் ரூ. 50, அருவங்காடு ரூ. 55, கேத்தி ரூ. 60, லவ்டேல் ரூ. 65, உதகை ரூ. 70 என உயர்த்தப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com