நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். 
நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். 

ஆளுநர் குறித்து அவதூறானச் செய்தியை நக்கீரன் ஏப்ரல் 20 இதழில் வெளியிட்டதாகக் கூறி, அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் உட்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டார். 

மேலும் அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் நீதிபதி ரத்து செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் எந்தநேரத்தில் கைது செய்யலாம் எனக் கருதி, நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றதில் முன் ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com