கருணாநிதியின் வெண்கலச் சிலை: பார்வையிட்டார் ஸ்டாலின்

மீஞ்சூர் புதுப்பேட்டில் உள்ள சிற்பக் கூடத்தில் தயாராகி வரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலைச் சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
கருணாநிதியின் வெண்கலச் சிலை: பார்வையிட்டார் ஸ்டாலின்

மீஞ்சூர் புதுப்பேட்டில் உள்ள சிற்பக் கூடத்தில் தயாராகி வரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலைச் சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
 பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் புதுப்பேடு பகுதியில், சிலைகளை வடிவமைக்கும் சிற்பக் கூடம் அமைந்துள்ளது. இங்குள்ள சிற்பியான தீனதயாளன், கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் சிலை, அவரது தந்தை முத்துவேலர் சிலை, முரசொலி பவள விழாவின் போது, வடிவமைக்கப்பட்ட கருணாநிதி அமர்ந்த நிலையில் உள்ள மார்பளவுச் சிலை, முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலை ஆகியவற்றை வடிவமைத்தவர் ஆவார்.
 தற்போது, 8 அடி உயரத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை வடிமைக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் சிலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது.
 இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதுப்பேடு பகுதியில் உள்ள சிற்பக் கூடத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அங்கு வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் கருணாநிதியின் உருவச் சிலையை பார்வையிட்டு, பணி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, பொன்முடி, கே.பி.பி. சாமி, க.சுந்தரம், திருவள்ளூர் மாவட்ட திமுக செயலர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மற்றும் அக்கட்சியின் மீஞ்சூர் பகுதி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com