தமிழக மீனவர்களின் 184 படகுகளும் சேதம்: இலங்கை சென்ற மீட்புக்குழுவினர் அதிர்ச்சி

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 184 விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அங்கு சென்ற மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் 184 படகுகளும் சேதம்: இலங்கை சென்ற மீட்புக்குழுவினர் அதிர்ச்சி

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 184 விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அங்கு சென்ற மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
 தமிழத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மீன்பிடிக்க சென்ற 184 விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
 இதனால் காரைநகர், காங்கேசன், மன்னார், கல்பட்டி உள்ளிட்ட துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 184 படகுகளையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
 இந்த விசைப்படகுகளை மீட்டு வர மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரான் தலைமையில் மீனவ சங்க நிர்வாகிகள் 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 10 ஆம் தேதி விமானம் மூலம் இலங்கை சென்றனர்.
 வியாழக்கிழமை முதல் கட்டமாக காரை நகர்ப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 107 விசைப்படகுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மன்னார், கல்பட்டி, காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 75 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். விசைப்படகுகள் உரிய முறையில் பாதுகாப்புடன் நிறுத்தப்படாததால் 90 சதவீதப் படகுகள் உடைந்தும், கடல் நீரில் மூழ்கிய நிலையிலும் உள்ளன. மேலும் படகுகளின் இன்ஜின்கள் செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தன. இதனைக்கண்ட மீட்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
 இந்த படகுகளை மீட்டு வந்தாலும் எவ்வித பயனும் இல்லை என்று மீனவ சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
 இதனால் சேதமடைந்த விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.30 லட்சம் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com