பரிதி இளம்வழுதி மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பரிதி இளம்வழுதி மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 58. 

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை எம்எல்ஏவாக தொடர்ந்து இருந்துள்ளார்.

1996 முதல் 2001 வரை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்தவர். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர்.

பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்துள்ளது. தன்னந்தனியாக சட்டப்பேரவையில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர். திமுகவில் அவர் கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். அவரால் இந்திரஜித், வீர அபிமன்யு என பரிதி இளம்வழுதி போற்றப்பட்டவர். திமுக இளைஞரணி வளர என்னுடன் துணை நின்றவர். பரிதி மறைவு வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்துவிட்டது என்றார். 

2013-ஆம் ஆண்டு தலைமையிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலகி ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com