புதுவை முதல்வரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் மறுப்பு

புதுவை முதல்வர் நாராயணசாமி வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். 
புதுவை முதல்வரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் மறுப்பு

புதுவை முதல்வர் நாராயணசாமி வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். 

புதுவை துணைநிலை ஆளுநர் மீது முதல்வர் நாராயாணசாமி சனிக்கிழமை காலை குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில்,

"சிஎஸ்ஆர் திட்டத்தில் ஆளுநர் மாளிகையை கைகாட்டி ரூ.85 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது. சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது" என்றார்.  

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 

"புதுவை ஆளுநர் மாளிகையில் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யப்படவில்லை. சமூக மேம்பாடு திட்டத்தில் உதவிட முன்வருவோருக்கு வழிகாட்டுகிறோம். குறிப்பாக தூர் வாருதல் பராமரிப்புக்காக நன்கொடைகள் வழங்கினர். 25 வழித்தடங்களில் 84 கிமீ வரை தூர்வாரப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை பெயரில் ஒரு காசோலை கூட பெறவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com