வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை சௌந்திரராஜன்

ஊழல் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, அது விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். 
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை சௌந்திரராஜன்

ஊழல் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, அது விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், திமுக போன்ற கட்சிகள் மத்தியில் காங். ஆட்சியில் இணைந்து இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் பதவி விலகினார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை. அதேசமயம் ஊழல் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, அது விசாரிக்கப்பட வேண்டும். எனவே தமிழக முதல்வர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

தற்போது இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தும் திமுக போன்ற கட்சிகள் மத்தியில் காங். ஆட்சியில் இணைந்து இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் பதவி விலகினார்களா?

பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், அந்த அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com