ஜிஎஸ்டி.யால் சிவகாசி, திருப்பூரில் தொழில்கள் நசிவு: சஞ்சய்தத்

ஜிஎஸ்டி. வரியால் சிவகாசி மற்றும் திருப்பூரில் தொழில்கள் நசிந்து வருகின்றன என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக மேலிடபார்வையாளருமான சஞ்சய்தத் கூறினார்.
ஜிஎஸ்டி.யால் சிவகாசி, திருப்பூரில் தொழில்கள் நசிவு: சஞ்சய்தத்

ஜிஎஸ்டி. வரியால் சிவகாசி மற்றும் திருப்பூரில் தொழில்கள் நசிந்து வருகின்றன என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக மேலிடபார்வையாளருமான சஞ்சய்தத் கூறினார்.
சிவகாசியில் சனிக்கிழமை நடைபெற்ற, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தல் வர உள்ளதால் பூத்கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் பல ஊர்களில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பெருவாரியாக இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை காட்டுகிறது. தமிழக ஆட்சியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி  இயக்கி வருகிறார். தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. 
தமிழக முதல்வர் மீது சிபிஐ. விசாரணை நடைபெற உள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்  ஜெயிக்கும். ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்றால் தமிழகத்தில் இடைதேர்தல் நடத்த முடியாதா?  இது ஆளும் கட்சியின் பலகீனத்தையே காட்டுகிறது. தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் குறித்து ராகுல்காந்தி முடிவு செய்வார் என்றார். 
ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் தளவாய்பாண்டியன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜாசொக்கர், முன்னாள் எம்.எல்.வும், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளருமான ரவிஅருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com