காவலர் பணிக்கு 6119 பேர் தேர்வு: இணைய தளத்தில் தேர்வு முடிவு

காவலர் பணிக்கு 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. இத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

காவலர் பணிக்கு 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. இத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த விவரம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழக காவல்துறையில் ஆயுதப்படைப் பிரிவில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடங்களுக்கும், 46 பின்னடைவு பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி 32 மையங்களில் நடைபெற்றது.
இத் தேர்வை சுமார் 3 லட்சம் எழுதினர். தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் துணைத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த தேர்வுக் குழுவே, அங்கு உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டது.
இத்தேர்வுகளில் 1,303 பெண்கள் உள்பட 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5,531 பேர் ஆயுதப் படைக்கும், 351 பேர் சிறைத் துறைக்கும், 237 பேர் தீயணைப்புத் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வானவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள், இந்த இணையதளத்தைப் பார்த்து தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com