சென்னை-மதுரைக்கு விரைவில் புதிய ரயில்

சென்னை-மதுரை இடையே இரட்டை பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், புதிய ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மேலாளர் (இயக்கம்) எஸ்.அனந்தராமன் கூறினார்.

சென்னை-மதுரை இடையே இரட்டை பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், புதிய ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மேலாளர் (இயக்கம்) எஸ்.அனந்தராமன் கூறினார்.
 இது தொடர்பாக அவர் கூறியது: தெற்கு ரயில்வேயில் இரட்டை பாதைப் பணிகள் படிப்படியாக முடிந்து வருகின்றன. இதையடுத்து, பல்வேறு தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-மதுரை இடையே இரட்டை பாதை பணிகள் முடிந்துள்ளன. இதனால், ரயில்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சார்பில் தினமும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 நாகர்கோவில்-கன்னியாகுமரி, நாகர்கோவில்-தூத்துக்குடி உள்ளிட்ட தடங்களில் நடந்து வரும் இரட்டை பாதை பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிவடையும்போது, தென் மாவட்டங்களுக்கு இன்னும் கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும். தற்போது மதுரை வரை மட்டுமே இரட்டை பாதைப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், சென்னை-மதுரைக்கு புதிய ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரயில் இயக்கப்படும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com