டிசம்பரில் 60 சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை-செங்கோட்டை, சென்னை-திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
டிசம்பரில் 60 சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை-செங்கோட்டை, சென்னை-திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
 சென்னை-செங்கோட்டை: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06011) புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டையை அடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06012) புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
 சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 14, 28 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06001) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 9, 16 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (60002) புறப்பட்டு சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு வந்தடையும்.
 தாம்பரம்-கொல்லம்: தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28 தேதிகளில் மாலை 5.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பர் 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27 தேதிகளில் சிறப்புக் கட்டண ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
 சென்னை-நாகர்கோவில்: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25 தேதிகளில் இரவு 7 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06007) புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 5, 12, 19, 26 தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06008) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
 இவைதவிர, சென்னை-ஆமதாபாத், சென்னை-சந்திரகாச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com