சென்னையில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் துவக்கம்

சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் துவக்கம்

சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை- காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 4,500 தண்ணீர் லாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இந்தப் பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர், சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனியார் லாரி வேலை நிறுத்தத்தை ஒட்டி பாதிப்புக்கு உள்ளான மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடிக் கட்டடங்களில் இருக்கும் வீடுகளுக்கு உடனடியாகத் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சென்னை குடிநீர் வாரியம் மேற்கண்ட பாதிப்புக்குள்ளான நுகர்வோர் தங்களது லாரிகள் அல்லது அவர்களால் அங்கீகாரம் பெற்ற லாரிகளுக்கு சென்னை குடிநீர் வாரிய நீர் நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் வழங்க விரிவான திட்டம் தயாரித்தது.

இந்த வசதியைப் பெற பாதிப்புக்குள்ளான நுகர்வோர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு முறையான விண்ணப்பத்துடன் குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்குத் தேவையான குடிநீர் கட்டணத்தை முன்னரே செலுத்தி, நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லாரிக்கு இரண்டு நடைகள் வீதம் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் குடிநீர்த் தேவை இருப்பின், முறையாகப் பரிசீலித்து பின்னர் ஆவன செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்களுக்கு மாநகர குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com