ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே இரட்டைக் கொலை: பழிக்குப் பழியா?  

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய் மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே இரட்டைக் கொலை: பழிக்குப் பழியா?  

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய் மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் கடந்த மே மாதம் 20-ம் தேதி, விஜய், பூமிநாதன் ஆகிய இருவரை மர்மக் கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் 20 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் 12 பேர், ஏற்கெனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் வாலாந்தரவை அருகே உள்ள ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வாசு (36),  ரெவின்யூவலசை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்காமாட்சி மகன் பிரசாந்த் (26) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா அளித்த பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உத்தரவிட்டார். அதன்படி, அதற்கான உத்தரவு நகல், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

வாலாந்தரவை இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய் மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே  வைத்து கார்த்திக் மற்றும் விக்கி ஆகிய இரு இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று செவ்வாய் மாலை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்று விட்டது. 

இது வாலாந்தரவை இரட்டைக் கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக நடந்தது என்று சந்தேகிக்கப்படுவதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com