வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க  சென்னை ஆட்சியர் கோரிக்கை  

கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க சென்னை ஆட்சியர்  சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.  
வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க  சென்னை ஆட்சியர் கோரிக்கை  

சென்னை: கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க  சென்னை ஆட்சியர்  சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

வெப்ப மண்டலச் சூறாவளிப் புயலான 'வர்தா'  கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது. அப்போது பெய்த பெருமழை மற்றும் வீசிய கடும் காற்றின் காரணமாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் கீழே சரிந்து விழுந்தன. 30 ஆயிரம் மின்கம்பங்கள், 600 டிரான்ஸ்பார்மர்கள், 70 ஆயிரம் வீடுகள், படகுகள், விவசாய நிலங்கள் கடும் சேதம் அடைந்தன. புயல் பாதிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க  சென்னை ஆட்சியர்  சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் காரணமாக பலத்த பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட்டது. பின்னர் அது தொடர்பான சேத விபரங்களை கணக்கிட  உருவாக்கப்பட்ட குழு செய்த ஆய்வின் இறுதியில் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியைச் சேர்ந்த 9 பேரைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.  

எனவே காணாமல் போன அந்த ஒன்பது பேர் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக குறிப்பிட்ட பகுதிக்கான வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அல்லது சென்னை ஆணையர் ஆகியவர்களை 15 நாட்களுக்குள் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவிக்கலாம். 

அவ்வாறு எதுவும் தகவல்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் உயிரிழந்ததாகக் கருதப்படுவார்கள். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com