ஆன்லைனில் பட்டாசு விற்பனை: உயர்நீதிமன்றம் தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஆன்லைனில் பட்டாசு விற்பனை: உயர்நீதிமன்றம் தடை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக ஷேக் அப்துல்லா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் பல்வேறு பெயர்களில் பட்டாசு விற்பனை தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு, ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடை செய்ய எந்த விதிகளும் இல்லை எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. 
உரிமங்கள் எதுவும் இல்லாமல் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதித்தால், பாதுகாப்பற்ற சீன பட்டாசுகள் விற்பனை அதிகரிக்கும். சீன பட்டாசுள் விற்பனையின் காரணமாக உள்நாட்டு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே, உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்க வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்ய வரும் நவம்பர் 15 -ஆம் தேதி வரை தடைவிதித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com