தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையின் பிரபல வணிக வளாகத்திற்கு இன்று 'லீவு'

தனியார் குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்வதன்  எதிரொலியாக, சென்னையின் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ புதன் ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையின் பிரபல வணிக வளாகத்திற்கு இன்று 'லீவு'

சென்னை: தனியார் குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்வதன்  எதிரொலியாக, சென்னையின் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ புதன் ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

சென்னையில் தனியார் குடிநீர் லாரிகளின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. அத்துடன் செவ்வாய் மாலையில் இருந்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வந்தாலும் குடிநீர் லாரிகளை நம்பி இயங்கக்  கூடிய விடுதிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன. 

இந்நிலையில் தனியார் குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்வதன்  எதிரொலியாக, சென்னையின் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ புதன் ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ புதனன்று பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக வெளியில் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அங்கிருந்தோர் அளித்த தகவலாவது:

மாதம் ஓரும் முறை பராமரிப்புக்காக வளாகம் மூடப்படுவது வழக்கம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, இங்கு பல்வேறு பகுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிரமப்படாத அள்வுக்கு குடிநீரைச் சேமித்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே அதனைஉறுதி செய்யும் பொருட்டு இன்று ஒரு நாள் வளாகம் மூடப்படுகிறது. ஆனால் திரையரங்குகள் மட்டும் செயல்படும். 

இவ்வாறு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com