தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை: அமைச்சர் வேலுமணி 

தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை: அமைச்சர் வேலுமணி 

தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை- காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 4,500 தண்ணீர் லாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெற்ற வரும் இந்த ஆலோசனையில் அமைச்சர் வேலுமணி, அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
வேலைநிறுத்தம் தொடர்பாக தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். இன்றைக்குள் சுமூக தீர்வு எட்டப்படும்.

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. கேன் குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com