வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளல் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  
வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளல் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  

அண்ணா சாலை, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது. எனவே அக்டோபர் 20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com