தமிழகத்தில் எத்தனை பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனா்? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

தமிழகத்தை சோ்ந்த 15 இலட்சம் போ் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனா் என்றாா் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் எத்தனை பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனா்? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

கரூா்: தமிழகத்தை சோ்ந்த 15 இலட்சம் போ் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனா் என்றாா் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், குரும்பபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நலவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் அண்மையில் திறந்து வைத்த நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மத்திய இணை அமைச்சா் பொன். இராதாகிருஷ்ணன் பேசுகையில், அனைவருக்கும் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1.50 இலட்சம் நலவாழ்வு மையம் கட்ட திட்டமிடப்பட்டு இன்று இந்த நலவாழ்வு மையம் திறந்து வைக்கப்படுகிறது. 

இதன் மூலம் கால விரையத்தை தவிா்த்து விரைவாக மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் விலைமதிப்பில்லாத மனித உயிா்கள் காக்கப்படுகிறது.

இதில் கா்ப்பகால மற்றும் மகப்பேறு சேவைகள், குழந்தைகள் வளா் இளம் பருவ நலச்சேவைகள், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மற்றும் சேவைகள், கண் பரிசோதனை உள்ளிட்ட 12 வகையான சுகாதார நல சேவைகளும், 40 வகையான ஆய்வக பரிசோதனைகளும் அளிக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் நலவாழ்வு‘ என்பது அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து சுகாதார நல சேவைகள் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே இலவசமாக தரமான வகையில் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

மேலும் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு 8.50 கோடி மதிப்பிலான கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் மட்டும் 89 ஆயிரத்திற்கும் மேல் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10.27 கோடி மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் பயன் பெற மத்திய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்கி வருகிறது. பெண் சிசுவை காக்க மத்திய அரசு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்கள் எரிவாயு இணைப்பை மானியத்தில் பெற்று பயன்பெறுகின்றனா். தமிழகத்தை சோ்ந்த 15 இலட்சம் போ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனா் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com