மதச் சடங்கு விவகாரத்தில் நீதிமன்றம் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் 

மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
மதச் சடங்கு விவகாரத்தில் நீதிமன்றம் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் 


சென்னை: மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரியும் வெங்கடநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி, மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கருத்துக் கூறினார்.

மேலும், பீடாதிபதி நியமனத்துக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com