சபரிமலை தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்று வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்று வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
 சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சபரிமலை தீர்ப்புக்குப் பிறகு பெண்கள் யாரும் சபரிமலைக்குப் போனது போன்று தெரியவில்லை. அதாவது பக்தி உள்ள பெண்கள் சபரிமலைக்குச் சென்றது போல தெரியவில்லை. சமூக ஆர்வலர்கள்தான் சபரிமலைக்குச் செல்ல முயற்சித்தார்கள். அதுவும், பக்தி உள்ளவர்களை அவமானப்படுத்துவதற்காகவே, அவர்கள் இப்படிச் செல்ல முயலுகிறார்கள்.
 உண்மையாகவே ஐயப்பன் மீது பக்தி கொண்ட பெண், ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என விருப்பப்பட்டால், அந்தப் பெண்ணை தடுக்கக் கூடாது என்று சொல்லுகிறது உச்ச நீதிமன்றம். அப்படிப் பார்த்தால், உண்மையான பக்தி கொண்டிருக்கும் பெண்கள், சபரிமலைக்குச் செல்ல முற்படவே இல்லை என்பதே உண்மை. சபரிமலை பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. பெண்கள் சபரிமலைக்கு போக வேண்டாம் என்று பெண்களே வேண்டுகோள் விடுப்பதை நாம் காண முடிகிறது. மேலும், சபரிமலைக்குள் நுழைய அனுமதி வேண்டி பக்தியுள்ள பெண்கள் எவரும் ரிட் மனுவை தாக்கல் செய்யவில்லை. வெளி ஆள்களே இத்தகைய மனுவை தாக்கல் செய்தனர்.
 பக்தியை அவமானப்படுத்தும் நோக்கில், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் சபரிமலை குறித்து குறை கூறினர். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்கள் இல்லை. பிரச்னை வர வேண்டும் என்பதை எதிர்நோக்கியுள்ள அரசுதான் தற்போது கேரளத்தில் உள்ளது. கேரள முதல்வர் அவரது கட்சிக்கு விரோதமாக பேச முடியுமா? மதம் சார்ந்த சட்ட, திட்டங்கள் நீதிமன்றத்தால் மதிக்கப்பட வேண்டும். சபரிமலை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. அதை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றார் குருமூர்த்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com