அவதூறுப் பேச்சு: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார் ஹெச். ராஜா

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பேச்சுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் ஹெச். ராஜா.
அவதூறுப் பேச்சு: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார் ஹெச். ராஜா


சென்னை: நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பேச்சுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் ஹெச். ராஜா.

உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் ஹெச். ராஜா கூறியதை அடுத்து, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஹெச். ராஜா பேசியிருந்தார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரான ஹெச். ராஜா, கோபம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், பிறகு அது தவறு என்று வருந்தியதாகவும் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com