தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்: சென்னை ஆட்சியர்

சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். 
தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்: சென்னை ஆட்சியர்

சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். 

சென்னை முழுவதும் பணி நிமித்தமாக நாள்தோறும் பலர் வருகை தருகின்றனர். குறிப்பாக பேச்சுலர்களின் வரவு அதிகளவில் உள்ளது. இதனால் மாநகரம் மட்டுமல்லாமல் சுற்றுப்பறப் பகுதிகளிலும் அதிகளவிலான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பேச்சுலர்கள் தங்குவதற்கு வசதியாக விடுதிகள் பல அமைந்துள்ளன. இவற்றில் ஆண்கள், பெண்கள் என இருவரும் தங்கும் விதமாக பிரத்தியேக விடுதிகள் செயல்படுகின்றன. இதனிடையே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்யாத மகளிர் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com