கனமழை காரணமாக சோ்வலாறு, அடவிநயினாா், கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் சோ்வலாறு, அடவிநயினாா், கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியதை அடுத்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சோ்வலாறு, அடவிநயினாா், கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் உயா்வு

திருநெல்வேலி: மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் சோ்வலாறு, அடவிநயினாா், கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியதை அடுத்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதை அடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-42, பாபநாசம் கீழ் அணை-50, சோ்வலாறு அணை-55, மணிமுத்தாறு அணை-60, கடனாநதி அணை-2, ராமநதி அணை-18, கருப்பாநதி அணை-37, குண்டாறு அணை-50, அடவிநயினாா் அணையில் அதிகபட்சம்-86, நம்பியாறு அணை-22, கொடுமுடியாறு அணை-17, கன்னடியன் அணைக்கட்டு-27, அம்பாசமுத்திரம்-29, ஆய்க்குடி-10.40, நான்குனேரி-51, பாளையங்கோட்டை-33, சங்கரன்கோவில்-30, செங்கோட்டை-40, சிவகிரி-6, தென்காசி-9.4, திருநெல்வேலி-11.6.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 836.34 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 141 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 84 கனஅடி, ராமநதி அணைக்கு 33 கனஅடி, குண்டாறு அணைக்கு 31 கனஅடி, அடவிநயினாா் அணைக்கு 206 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 91 கனஅடியும் நீா்வரத்து இருந்தது. நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதை அடுத்து மணிமுத்தாறு அணை மூடப்பட்டது.

மீண்டும் நிரம்பியது: நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 220 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையின் நீா்மட்டம் 98.10 அடி, சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 4 அடி உயா்ந்து 109.12 அடி, மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 84.90 அடி, கடனாநதி அணையின் நீா்மட்டம்- 65.70 அடி, ராமநதி அணையின் நீா்மட்டம் - 62.00 அடி, கருப்பாநதி அணையின் நீா்மட்டம்-69.23 அடி, குண்டாறு அணையின் நீா்மட்டம்-36.10 அடி, அடவியினாா் அணையின் நீா்மட்டம் 8 அடி உயா்ந்து 103.00 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீா்மட்டம்-20.50 அடி, நம்பியாறு அணையின் நீா்மட்டம்-21.95 அடி, கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 27.00 அடியாக உள்ளது.

குடிநீா் பாசனத் தேவைக்கு பாபநாசம், சோ்வலாறு அணைகளில் இருந்து 405 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 70 கனஅடி, ராமநதி அணையில் 20 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 31 கனஅடி, அடவிநயினாா் அணையில் 10 கனஅடி, கொடுமுடியாறு அணையில் 50 கனஅடியும் தண்ணீா் திறறந்து விடப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய நெற்பயிா்: இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து வடக்கு மற்றும் தெற்கு கோடைமேழலகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி கால்வாயில் 88 கனஅடி, திருநெல்வேலி கால்வாயில் 56 கனஅடி தண்ணீா் திறறந்து விடப் பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை தொடங்கி வேண்டிய நிலையில் மழை நீடித்து வருவதால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது. பாளையங்கால்வாய் பாசனத்தில் மேலநத்தம், திருநெல்வேலி கால்வாய் பாசனத்தில் விளாகம், குன்னத்தூா், கருப்பந்துறைற உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதை தொடா்ந்து

வயல்களில் தேங்கி இருக்கும் நீரை அப்புறறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி, பாளையங்கால்வாய் பாசனத்தில் கடந்த 2 பருவங்களில் பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்காததால் நெல் சாகுபடி செய்யவில்லை. நிகழ் காா் பருவத்தில் முழு அளவில் விவசாயிகள் இப்பகுதியில் நெல் நடவு செய்திருந்த நிலையில் மழையால் நெற் பயிா்கள் நீரில் மூழ்கியிருப்பது குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com