காங்கிரஸ் - கமல் கூட்டணியா?: சஞ்சய் தத் விளக்கம்

எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கமல் கூட்டணிக்கு வந்தால், அவரைச் சேர்ப்பது குறித்து திமுக -காங்கிரஸ் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்
காங்கிரஸ் - கமல் கூட்டணியா?: சஞ்சய் தத் விளக்கம்


எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கமல் கூட்டணிக்கு வந்தால், அவரைச் சேர்ப்பது குறித்து திமுக -காங்கிரஸ் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறினார்.
இதுதொடர்பாக அவர், சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அந்தக் குழுவினர் கருத்துகளைக் கேட்டு அதன் பிறகு அறிக்கை தயாரித்து வெளியிடும். 
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை வீசுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். எந்த நிபந்தனையும் இல்லாமல் கமல் எங்கள் கூட்டணிக்கு வந்தால், அவரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக - காங்கிரஸ் முடிவு செய்யும். அவர் எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம். 
தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ மேற்கொள்ள வேண்டும்.
மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார் சஞ்சய் தத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com