டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க துரித நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 
டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க துரித நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்கிழமை ஆலோசனை நடத்தினர். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பேருந்துநிலையம் போன்ற இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், சாதாரண காய்ச்சல் என்று நோயாளிகள் வந்தாலும் டெங்கு உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். டெங்குவால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கான தண்ணீரின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com