தமிழகத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 பேர் மரணம்

தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 25 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. 
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 பேர் மரணம்

தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 25 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இதே போன்று தினமும் 5 முதல் 20 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 

விட்டு விட்டு மழை பெய்வது, மேகமூட்டத்துடன்,  இரவில் குளிருடன் காணப்படுவது போன்ற சீதோஷ்ண நிலைகள் காரணமாக சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிவகங்கையில் ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டானது. காரைக்குடி அருகே மானகிரியில் அகத்தியன், வெள்ளையபுரத்தை சேர்ந்த மனோகர் ஆகிய 2 பேர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர். 

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் எஜிப்டை கொசுக்கள், தேங்கிய மழை நீரில் உற்பத்தியாகின்றன. எனவே குடியிருப்பு நலச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மூலம் தங்களது குடியிருப்புகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com