நீதிமன்ற உத்தரவில் முதல்வர் மீது எந்தக் குறையும் கூறப்படவில்லை

நீதிமன்ற உத்தரவில் முதலமைச்சர் மீது எந்த விதமான குற்றமும் கூறவில்லை, நேர்மையான விசாரணைக்குத் தான் உத்தரவிட்டுள்ளது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி
நீதிமன்ற உத்தரவில் முதல்வர் மீது எந்தக் குறையும் கூறப்படவில்லை


நீதிமன்ற உத்தரவில் முதலமைச்சர் மீது எந்த விதமான குற்றமும் கூறவில்லை, நேர்மையான விசாரணைக்குத் தான் உத்தரவிட்டுள்ளது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பும் முன் திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: 
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பது குறித்து முதல்வரிடம் கேட்டபோது, உயர்ந்த பதவி என்பதாலும் வழக்கு நியாயமாக, நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அதில் முதலமைச்சர் குறித்து எவ்வித குற்றமோ, சாலை அமைப்பதில் எந்தவிதத்தில் முறைகேடு எனவோ நீதிமன்றம் கூறவில்லை. முதல்வர் மீதான குற்றச்சாட்டு என்பதாலும் நான் தனிப்பட்ட முறையில் இதனை மேல்முறையீடு செய்துள்ளேன். நாடாளுமன்றத் தேர்தல் பணி தொடர்பாக அ.தி.மு.க. செயல்பாடு வேகமாக இல்லை ஊடகத்தினர் தான் சொல்கிறீர்கள். 
காவிரியில் உபரி நீர் வரும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்கான திட்டங்களை உருவாக்க ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதமாக அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முக்கொம்பு மேலணையில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்தபிறகு, ஒப்பந்தம் (டெண்டர்) கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார். 
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல்வர் உதவி: முன்னதாக புதுக்கோட்டை செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட சின்னசூரியூரைச் சேர்ந்த நபரை மீட்டு, தனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற முதல்வர் அனுப்பி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com