அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை: ஓரிரு நாள்களில் திறப்பு

புதிதாக வடிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓரிரு நாள்களில் திறக்கப்பட உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள ஜெயலலிதாவின் சிலை. அருகில் சிலையை வடிவமைத்த ராஜ்குமார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள ஜெயலலிதாவின் சிலை. அருகில் சிலையை வடிவமைத்த ராஜ்குமார்.


புதிதாக வடிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓரிரு நாள்களில் திறக்கப்பட உள்ளது.
வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலையானது எட்டு அடி உயரம் கொண்டதாகும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவச் சிலை திறக்கப்பட்டது.
சிலையால் சர்ச்சை: கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலையின் உருவம் அவரைப் போன்று இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சிலை குறித்து சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, சிலையை மாற்றும் முடிவை அதிமுக தலைமை எடுத்தது. புதிய சிலையை வடிவமைக்கும் பொறுப்பு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய சிலையானது முழுவதும் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலைக்கு இணையான உயரத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையானது 800 கிலோ எடையுடன், எட்டு அடி உயரத்தில் தயாராகியுள்ளது. தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையையும் ராஜ்குமாரே தயாரித்துள்ளார்.
வரும் 28-இல் திறப்பு: புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையானது வரும் 28-இல் திறக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட உள்ள இந்தச் சிலையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் திறந்து வைப்பர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com