மீ டூ புகாரில் சிக்கிய இசைக்கலைஞர்கள்: சென்னை மார்கழி இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 'தடா' 

'மீ டூ ' பாலியல் புகாரில் சிக்கிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் சென்னையின்  மார்கழி இசைக்கச்சேரி சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.   
மீ டூ புகாரில் சிக்கிய இசைக்கலைஞர்கள்: சென்னை மார்கழி இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 'தடா' 

சென்னை: 'மீ டூ ' பாலியல் புகாரில் சிக்கிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் சென்னையின்  மார்கழி இசைக்கச்சேரி சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.   

'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழக கர்நாடக இசையுலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் சிலர் மீது 'மீடூ' ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் கர்நாடக இசையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியாது. 

குறிப்பாக இந்தப் புகாரில் இசைக்கலைஞர்கள் என். ரவிகிரண், ஒ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், ஆர்.ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் ரவிகிரண் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். 

இந்நிலையில் 'மீ டூ ' பாலியல் புகாரில் சிக்கிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் சென்னையின்  மார்கழி இசைக்கச்சேரி சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.   
 
சென்னை கர்நாடக இசையுலகில் 'மார்கழி சீசன் அல்லது டிசம்பர் சீசன்' உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும். இந்நிகழ்ச்சிகளை மெட்ராஸ் இசை அகாடமி ஒருங்கிணைத்து வருகிறது. தற்போது 'மீ டூ ' பாலியல் புகாரில் சிக்கிய இசைக்கலைஞர்கள், டிசம்பர் சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து, அகாடமியின் செயலர் முரளி கூறியதாவது:

மீடூ பாலிஓயால் புகார்களின் விளைவாக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தக் கலைஞர்கள் அனைவரது பெயர்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. முன்னர் சில சமயங்களில் மீடூ தவிர்த்தும் சில பாலியல் புகார்கள் வந்துள்ளன. தற்போது மீடூ புகார்களும் வந்துள்ளது.

அவர்கள் சிறந்த இசைக்கலைஞர்களாக இருக்கலாம். ஆனால் எங்கள் கச்சேரிகளில் யார் பங்கேற்க வேண்டும்? யார் பங்கேற்க வேண்டாம்? என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com