18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தங்கதமிழ்ச்செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தங்கதமிழ்ச்செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு, 3-வது நீதிபதியாக நீதிபதி எம்.சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் 18 சட்டப் பேரவை உறுப்பினர்களை நீக்கி பேரவைத் தலைவர் பி.தனபால் வெளியிட்ட உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். தகுதிநீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியான நிலையில் இன்று தினகரன் அணி அடுத்தகட்ட திட்டம் குறித்து மதுரையில் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து மதுரையில் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்கவே உச்சநீதிமன்றம் செல்கிறோம். நாளையே தேர்தல் வந்தாலும் 18 பேரும் சந்திக்க தயார். 22 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்யக் கோரி நவ. 10-ம் தேதி முதல் உண்ணாவிரதம், இறுதியாக ஆர்.கே.நகரில் உண்ணாவிரதம். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 2 அல்லது 3 நாட்களில் மேல்முறையீடு செய்ய 18 பேரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com