தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை 
தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை!


சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.02 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.02 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்ததால், கார், லாரிகளின், ஆட்டோக்களின் கட்டணங்களும் உயர்ந்ததால் வணிகர்கள், வியபாரிகள் சிரமத்திற்கு உள்ளானர். விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்தது பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்தியது. அனைத்து தரப்பினருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 4-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் முயற்சியாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 குறைக்கப்படுவதாக அறிவித்தார். மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்து வருகின்றன. இன்றைய பெட்ரோல், டீசல் விலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ.84.02 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ.79.02 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தில்லி: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ.80.85 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.73 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மும்பை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ.86.33 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.33 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com